2ம் மனைவி மீது வந்த கோபம்.. மகன் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொன்ற தந்தை
ஆத்தூர் தாலூகா சித்ரேவு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் மூத்த மனைவியுடன் பேச்சுவார்த்தை இல்லாத நிலையில், இரண்டாவது மனைவி பாக்கியலட்சுமி உடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த மாதம் பழனிச்சாமிக்கும், பாக்கியலட்சுமிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது, பாக்கியலட்சுமி கத்தியால் குத்தியதாக கூறப்படும் நிலையில், பழனிச்சாமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், திடீரென பாக்கியலட்சுமியின் மகனான கணேசனை, தலையில் கல்லை போட்டு பழனிச்சாமி கொலை செய்துள்ளார் .
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பழனிச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story