கொள்ளையடிக்க அழைத்ததால் ஆத்திரம்... ரவுடியை பாட்டிலால் குத்தி கொன்ற இளைஞர்...

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

செங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் பகுதியில் இயங்கி வந்த ஒயின்ஷாப் அது. நல்லதோ கெட்டதோ நாலு ரவுண்டு போடும் வழக்கம் கொண்ட குடிமகன்கள், இங்கு வந்தால் இயற்கை சூழலோடு உள்ள மயான பகுதியில் ஐக்கியமாகிவிடுவார்கள். சம்பவம் நடந்த அன்று இரவு, போதை ஏற்ற வந்தவர்கள் உயிர் பயத்தில் அலறி அடித்து ஓடியிருக்கிறார்கள். காரணம், 20 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கொடூரமாக குத்தி கொல்லப்பட்டிருக்கிறார். அடுத்த நாள் காலை சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், கொலை செய்யப்பட்டவர் யார்.? கொலைகான காரணம் என்ன? போன்ற கோள்விகளுக்கு விடை தேட விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள். சம்பவ இடத்தை சல்லடையாய் சலித்த காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், கொல்லப்பட்டவர் மதுரப்பாக்கம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த, பிரவீன் என்று தெரிய வந்திருக்கிறது. 20 வயதான பிரவீன், பார்ட் டைம்மாக பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து குடும்ப பாரத்தை சுமந்ததாக பிரவீன் மீது உங்களுக்கு ஒரு ஸ்சாப்ட் கார்னர் தோன்றாலாம். ஆனால் அவரது கடந்த கால கதையை கேட்ட பிறகு அந்த எண்ணம் அப்படியே தலைகீழாய் மாறிவிடும்.

பெட்ரோல் பங்கில் பார்டைமாக வேலை பார்த்து வந்த பிரவீனின் ஃபுல் டைம் ஜாப், அடிதடி, வழிபறி, கொள்ளை. சுருக்கமாக சொல்வதென்றால் பிரவீன் அடிக்கடி சிறைக்கு சென்று வரும் கவர்மெண்ட் பிள்ளை. சில மாதங்களுக்கு முன் 500 ரூபாய் சைனா போனுக்கு ஆசைபட்டு வழிபறியில் இறங்கி பிரவீன், செல்போன் உரிமையாளரை கொலை செய்து அன்று முதல் கொலைகாரனாக அவதாரம் எடுத்திருக்கிறார். அந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரவீன் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். அதன் பிறகு தான் அவர் குத்தி கொல்லப்பட்டிருக்கிறார். பிரவீனின் கொலை பழிக்கு பழிவாங்கலா, அல்லது வேறு எதாவது காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை வேகமெடுத்திருக்கிறது.சம்பவ இடத்தை சுற்றியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறார்கள். அப்போது பிரவீனுடன் ஒரு நபர் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்திருக்கிறது. உடனே போலீசார் அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்திருக்கிறார்கள். அவர் வேறு யாரும் இல்லை பிரவீனின் உயிர் நண்பர் ஈஸ்வரன். என்ன நடந்தது? யார் கொன்றது? எங்கு சென்றீர்கள்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளின் முடிவில் ஈஸ்வரன் எல்லா உண்மைகளையும் வாக்குமூலமாக ஒப்பித்திருக்கிறார்.

ஆம்... ஈஸ்வரன் தான் பிரவீனை கொன்ற கொலைகாரன்.

சம்பவத்தன்று பிரவீனும் ஈஸ்வரனும் பொன்மார் ஒயின்ஷாப்புக்கு வந்திருக்கிறார்கள். பாட்டில்களை வாங்கி கொண்டு அருகில் உள்ள பொட்டல் காட்டில் அமர்ந்து மது குடித்திருக்கிறார்கள். அப்போது போதையில் இருந்த பிரவீன், தான் செய்யும் திருட்டு வழிபறி கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களில் தனக்கு right hand-ஆக இருந்து உதவ வேண்டும் என்று ஈஸ்வரனுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு ஈஸ்வரன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.ஏற்கனவே கொலை செய்த எனக்கு உன்னையும் கொலை செய்ய தெரியும், என ஈஸ்வரனுக்கு பிரவீன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன ஈஸ்வரன், பிரவீனோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதன் தொடர்சியாக நடந்த கை கலப்பில் பீர் பாட்டிலை உடைத்து, ஈஸ்வரன் பிரவீனை சரமாரியாக குத்தி கொன்றிருக்கிறார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்