சுங்கச்சாவடியில் காசு கேட்டதால் ஆத்திரம் - ஊழியரை தாக்கி பா.ம.கவினர் மோதல்

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடியில் மேற்பார்வையாளரை தாக்கியதாக பாமகவை சேர்ந்த 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெங்கடேசன் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த போது வேகமாக வந்த காரை நிறுத்தி சுங்க கட்டணம் கேட்டுள்ளார் . காரில் இருந்த பாமக அரியலூர் நகர செயலாளர் விஜி உள்ளிட்டோர் வெங்கடேசனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த வெங்கடேசன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்