"எனக்கு தேவதை பிறந்திருக்கா" - இன்ஸ்டாவில் பகிர்ந்த சின்னத்திரை நடிகை திவ்யா

x

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சர்ச்சைக்கு உள்ளான நடிகர் அர்ணவின் மனைவி திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நடிகர் அர்ணவ் மற்றும் அவரின் மனைவி திவ்யா இடையிலான பிரச்சினை கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்துகிறார், மற்றொரு நடிகையுடன் தொடர்பு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார் திவ்யா. இதன் பேரில் நடிகர் அர்ணவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். கர்ப்பிணியாக இருந்த திவ்யா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த நிலையில் சீரியல் நடிகர்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு வளைகாப்பு நடத்திய வீடியோக்களும் வெளியே வந்தன. பிரசவ தேதி நெருங்குவதால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் நடித்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் திவ்யா. இந்த சூழலில் தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருக்கும் திவ்யா, புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்