மயக்க மருந்து கொடுத்து காளைகள் திருட்டு? - 2 வாரங்களில் 8 காளைகள்.. - கல்லாக்கட்டும் களவாணிகளால் அதிர்ச்சி
மதுரையில் பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தீவிரமாக தயார் படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் காளைகள் திருட்டுப் போவது தொடர்பான புகார்களும் காவல் நிலையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் 8 காளைகள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
இது காளைகளை பாசத்தோடு வளர்த்த உரிமையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளை எளிதில் தொட முடியாது என கூறும் காளை உரிமையாளர்கள், அவைகளுக்கு மயக்க மருந்தை கொடுத்து, நினைவை இழக்க செய்து அழைத்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நல்ல மவுசு உள்ளதால், அவைகளை திருடுபவர்கள் நல்ல விலைக்கு விற்று கல்லாக்கட்டுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே சிசிடிவி காட்சிகளை சேகரித்து காளைகளை கண்டுபிடிக்கும் பணிகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.