நடுரோட்டில் இளம்பெண்... துடிக்க துடிக்க கழுத்தறுத்து கொலை - ஒருதலைக் காதலால் நடந்த விபரீதம்

x

காக்கிநாடா அருகே குர்ராடா கிராமத்தை சேர்ந்த வெங்கட சூரிய நாராயணா என்ற இளைஞர், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை சில மாதங்களாக காதலித்து வந்தார்.

சூரியநாராயணாவின் காதலை அந்த இளம்பெண் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த சூரிய நாராயணா, சாலையில் சென்று கொண்டிருந்த அந்த இளம்பெண்ணை, மறைத்து வைத்திருந்த கத்தியால், கழுத்தை அறுத்துள்ளார்.

இதில் துடி துடித்தபடி ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் சரிந்து விழுந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்ததுடன், மரத்தில் கட்டி வைத்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அந்தப் பெண் அழைத்துச் செல்லப்பட்டபோது, வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கொலை செய்த சூரியநாராயணாவை கைது செய்ததுடன், விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்