இறந்தும் துடிக்கும் இதயம்...! உயிரை காப்பாற்ற விமானத்தில் பறந்த இதயம்..
மூளை சாவு அடைந்த பெண்ணின் இதயம் விசாகப்பட்டினத்தில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டாவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது.
விசாகபட்டினத்தைச் சேர்ந்த சன்னியாசம்மா என்ற பெண் கடந்த 16ம் தேதி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். விசாகபட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்டிருந்த நிலையில், மூளைசாவு ஏற்பட்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய சன்னியாசம்மாவின் உறவினர்கள் முன்வந்த நிலையில், அவரின் இதயம் போலீஸ் பாதுகாப்புடன் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து பத்மாவதி குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட நிலையில், சன்னியாசியம்மாவின் இதயம் அங்கு சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தைக்குப் பொருத்தப்படவுள்ளது.