முதலிரவில் ஒதுங்கியே இருந்த கணவன்.. ஆண்மை பரிசோதனை செய்த மனைவி - மாமியார் வீட்டை சீர்குலைத்த புது மாப்பிள்ளை

x
  • ஆந்திராவில் ஆண்மை பரிசோதனை செய்ததால் ஆத்திரமடைந்த புது மாப்பிள்ளை பெற்றோருடன் சேர்ந்து மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்ற பொறியாளருக்கும் , தெலுங்கானா மாநிலம் வனப்பர்த்தி பகுதியை சேர்ந்த ருக்மணிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
  • கணவர் தாம்பத்தியத்திலிருந்து விலகியே இருந்ததால் ஏமாற்றமடைந்த ருக்மணி, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து சரவணனை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஆண்மை பரிசோதனை செய்துள்ளனர்.
  • இது குறித்து சரவணன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர்கள்
  • மருமகள் ருக்மணி மற்றும் அவரது தாய், தந்தையை தங்கள் வீட்டிற்கு வரழைத்துள்ளனர்.
  • அங்கு தனது மனைவி ருக்மணியை மாடிக்கு அழைத்து சென்று சரவணன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
  • அவரது பெற்றோர் ருக்மணியின் தாய், தந்தையை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர்.
  • படுகாயமடைந்த ருக்மணியின் தாய் உயிரிழந்தார். தந்தை பலத்த காயங்களுடன் உயிர்தப்பினார்.
  • இதையடுத்து சரவணன், அவரது பெற்றோரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்