நடுரோட்டில் வைத்து ஆந்திர முதல்வரின் சகோதரி திடீர் கைது - தெலங்கானாவில் பெரும் பரபரப்பு
ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான, ஒய்.எஸ்.ஷர்மிளா, ஆட்சியை பிடிக்கும் நோக்கில், தெலங்கானா முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, மகாபூபாபாத் பகுதியில் ஷர்மிளாவை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்களை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினரும், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியினரும் மோதிக்கொள்ளும் சூழல் நிலவுகிறது. இதனால், பாதயாத்திரைக்கு வழங்கிய அனுமதியை போலீசார் திரும்ப பெற்ற நிலையில், அனுமதியின்றி பாதயாத்திரை மேற்கொள்ள முயன்ற ஷர்மிளாவை, போலீசார் கைது செய்தனர்
Next Story