"தனியாருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள்" -அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
என்எல்சியை வாங்க இருக்கும் தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாமக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம், அரியலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, ஒருபுறம் தமிழக அரசு விவசாயத்திற்கு தனி பட்ஜெட் போடும் நிலையில், மறுபுறம் வேளாண் துறை அமைச்சர், விவசாய நிலங்களை பறிப்பதற்கு துணை போகிறார் என்றார்.
வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் என்எல்சியை தனியாரிடம் விற்பனை மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அந்த நிறுவனத்தை திவால் நிலையில் இருக்கும் ஒரு நிறுவனம் திட்டமிட்டு வருகிறது என்றார். அந்த நிறுவனத்துக்கு நிலத்தை வாங்கி கொடுப்பதில் திமுக அமைச்சர்கள் தீவிரம் காட்டுகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.