அன்பு ஜோதி ஆசிரம வழக்கு... சிபிஐ விசாரிக்க கோரி அண்ணாமலை கடிதம்

x

அன்பு ஜோதி ஆசிரம வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சருக்கு தமிழக பா.ஜ.க.‌ தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

அதில், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரடைந்துள்ளதாகவும், விழுப்புரம் அருகே மனநலம் குன்றியவர்கள் இருந்த ஆசிரமத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரமத்தில் நிகழ்ந்த முறைகேட்டில் 13 பிரிவுகளின் கீழ், ஆசிரமத்தின் நிர்வாகி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றதுடன், ஆசிரமத்தின் உண்மையான விவரங்கள் முழுமையாக பராமரிக்கப்பட வில்லை என்றும் கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இப்படி முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கேட்டு கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்