600 கிலோ ரேஷன் அரிசி... ஆசிரமத்தில் வந்தது எப்படி? விசாரணை தீவிரம் - அன்பு ஜோதி ஆசிரம வழக்கு

x
  • அன்புஜோதி அறக்கட்டளை விவகாரத்தில் விசாரணையானது வேகமெடுத்திருக்கும் நிலையில் ஆசிரமத்தில் நடந்த சோதனையின் போது 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில் விசாரணையும் வேகமெடுத்திருக்கிறது.
  • இதனிடையே விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் தங்கவேலுவை சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
  • ஆசிரமம் குறித்து முதலில் புகார் தெரிவித்த முக்கிய நபர் என்பதால் அவர் நேரில் ஆஜரான நிலையில் அவரிடம் விசாரணையானது நடந்து வருகிறது.
  • இதேபோல் ஆசிரமத்தில் குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் தலைமையில் சோதனை நடந்தது.
  • அப்போது அங்கே ஆசிரமத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
  • இந்த ரேஷன் அரிசி பொதுமக்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதா? அல்லது ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்பவர்களிடமிருந்து பெறப்பட்டதா?
  • அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வாங்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணையானது நடந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்