ஷிஃப்ட் முடியும் நேரத்தில் ஊழியர்களுக்கு தினமும் சர்ப்ரைஸ் கொடுக்கும் IT நிறுவனம்
- ஊழியர்களின் ஒர்க் - ஃலைப் பேலன்ஸை உறுதி செய்ய, மத்தியபிரதேசத்தில் உள்ள ஐடி நிறுவனம் எடுத்துள்ள நடவடிக்கை, ஊழியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது...
- உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை அச்சம் காரணமாக, ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.
- இந்நிலையில், இந்தூரில் இயங்கிவரும் ஒரு ஐடி நிறுவனம், தங்கள் ஊழியர்களின் ஒர்க் - ஃலைப் பேலன்ஸை உறுதி செய்ய முனைந்துள்ளது.
- அதாவது, பணி நேரம் முடிந்தும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, அந்நிறுவனம் கணினி திரையில் அலர்ட் மெசேஜ் கொடுக்கிறது.
- அதில், "எச்சரிக்கை.. உங்கள் ஷிஃப்ட் நேரம் முடிந்துவிட்டது எனவும், அலுவலகத்தின் கணினி அடுத்த 10 நிமிடங்களில் ஷட்-டவுன் ஆகும், வீட்டிற்கு செல்லுங்கள்..." என்றும் குறிப்பிடப்படுகிறது.
- ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான பணிச்சூழலை வழங்க இவ்வாறு செய்துள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் கோலானி தெரிவித்தார்.
Next Story