இறப்பிலும் ஒன்று சேர்ந்த வயதான தம்பதி - மனைவி இறந்த துக்கத்தில் கணவர் உயிரிழப்பு | Husband | Wife

x

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருச்சி பாலக்கரையை சேர்ந்த 91 வயதான கிருஷ்ணன் என்பவரின் மனைவி 86 வயதான சம்பூர்ணத்தம்மாள் முதுமை காரணமாக உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த துக்கம் தாளாமல் அழுதுகொண்டு இருந்த கணவர் கிருஷ்ணன் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கிருஷ்ணன்-சம்பூர்ணத்தம்மாள் தம்பதியின் உடல்கள் மண்ணச்சநல்லூரில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்