கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி - போலீசார் , விவசாயிகளுக்கும் இடையே பயங்கர தள்ளு முள்ளு

x

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்... 5வது சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுகவலகத்தை முற்றுகையிட உத்தனப்பள்ளியில் இருந்து பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடைபயணம் மேற்கொள்ள இருந்தனர். இதையடுத்து அங்கு 150க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில்,

விவசாயிகள் உத்தனப்பள்ளி இராயகோட்டை சாலையில் மறியல் நடத்தியதால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் தனியார் மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்