மயக்க ஊசி செலுத்தப்பட்ட மக்னா யானை... கிரேன் மூலம் லாரியில் ஏற்றப்பட்டது
பென்னாகரம் பகுதியில் சுற்றித் திரிந்த மக்னா யானை, மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரண்டு காட்டு யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்தி, பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.
அந்த யானைகளை, ஆனைமலை முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட சின்னதம்பி என்கிற கும்கி யானையின் உதவியுடன் பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு யானைகளில், மக்னா வகையைச் சேர்ந்த ஒரு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ஆனைமலை முகாமுக்கு லாரியில் ஏற்றிச் எடுத்துச் சென்றனர்.
Next Story