நேற்று நடந்ததை விட மிக கோர விபத்து.. இந்தியாவில் இதற்கு முன்னும் நடந்திருக்கிறது? 800 உயிரை பறித்த அந்த விபத்து நடந்தது எங்கே?
இந்தியாவில் சமீப காலங்களில் நடந்த கோரமான ரயில் விபத்துக்கள் என்னென்ன என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....
ஒடிசாவில் கடந்த 2009ஆம் ஆண்டு இதே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜீலை ஏழாம் தேதியன்று, சாப்ரா - மதுரா எக்ஸ்பிரஸ் ரயில், பேருந்து மீது மோதிய விபத்தில் 69 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதியன்று, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்த விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதியன்று, கோரக்தாம் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியன்று, உத்தரப்பிரதேசத்தில் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கான்பூரில் கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதியன்று, இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 150 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று, கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் 21 பேர் உயிரிழந்தனர்.
மேற்குவங்கத்தில் கடந்தாண்டு ஜனவரி மாதம் பிகானேர் - கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 9 பேர் உயிரிழந்தனர்.
பீகாரில் கடந்த 1981 ஆம் ஆண்டு பாகமதி ஆற்றில் ரயில் கவிழ்ந்த விபத்தில் எண்ணூற்றுக்கு மேற்பட்டோர் பலியாகினர். இதுவே இந்தியாவின் மோசமான ரயில் விபத்தாக கருதப்படுகிறது.