தூக்க கலக்கத்தால் நேர்ந்த விபத்து..."உதவி கரங்கள் நீட்டிய குரோம்பேட்டை மக்கள்" | ACCIDENT | CHENNAI

x

குரோம்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கோழிகளை ஏற்றி வந்த மினி வேன் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே, சாலையில் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கோழிகளை ஏற்றி வந்த மினி வேன் மோதியது. இந்த விபத்தில் மினி வேனின் முன் பக்கம் முழுமையாக நசுங்கிய நிலையில், வேனின் ஓட்டுனர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மினி வேனின் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்