நீலக்குறிஞ்சிப்பூவை பார்க்க ஆசைப்பட்ட 87 வயது தாய்- தோளில் தூக்கி சென்ற மகன்

x

நீலக்குறிஞ்சிப்பூவை பார்க்க ஆசைப்பட்ட 87 வயது தாய்- தோளில் தூக்கி சென்ற மகன்

கேரளா மாநிலம் கோட்டயத்தில் அரிய வகை நீலக்குறிஞ்சிப்பூவை, பார்க்க ஆசைப்பட்ட தாயை, மகன் தோளில் சுமந்து அழைத்து சென்று ஆசையை நிறைவேற்றினார். 87 வயதான எமிக்குட்டி என்பவரது மகன் ரோஜென் சுவிட்சர்லாந்தில் இருந்து தாயை பார்க்க கேரளா வந்தார். அப்போது இடுக்கி மாவட்டம் கல்லிப்பாறையில் நீலக்குறிஞ்சிப்பூ பூத்திருப்பதை காண வேண்டும் என தாய் எமிக்குட்டி மகனிடம் கூறினார். தாயின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இடுக்கி வந்த ரோஜன் , குறிஞ்சிப்பூ இருக்கும் இடத்திற்கு, தாய் எமிக்குட்டியை அழைத்து சென்று ரசிக்க வைத்தார். பின்னர் குடும்பத்தினர் அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்