பிளஸ் 2 மாணவியிடம் 18 வயது இளைஞர் பாலியல் அத்துமீறல்....மாணவி கர்ப்பம் அடைந்ததால் பெற்றோர் அதிர்ச்சி..

x

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போளூர் அடுத்த லாடவரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வா. 18 வயது இளைஞரான இவர், அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் பிளஸ் 2 மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், மாணவியிடம் இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகாரளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார் இளைஞரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்