5 பேருக்கு மறுபிறவி கொடுத்த 11 வயது சிறுவன்
வேலூரில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் கொசவன்புதூரை சேர்ந்த கோவிந்தராஜ் - அர்ச்சனா தம்பதியின் மகன் சுதீஷ், சாலை விபத்தில் சிக்கி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த நிலையில், சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய, அவரது பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனைக்கு இதயமும், அப்போலோ மருத்துவமனைக்கு நுரையீரலும், வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு கல்லீரல், இடது சிறுநீரகம் மற்றும் கண்களும் வழங்கப்பட்டன.
Next Story