ஆவினில் லீக்கான அமோனியா வாயு..மூச்சு விட முடியாமல் ஓடிய பணியாளர்கள்..

x

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனத்தில், பால் குளிரூட்டும் குழாயில் திடீரென்று அமோனியா கசிவு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோகர்ணம் பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான ஆவின் நிறுவனம் இயங்கி வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து, 60 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்த பால், முதலில் பலத்தப்படுத்தப்ட்டு, பின்னர் குளீருட்டுப்படும். இந்த குளீருட்டும் இயந்திரத்தில் உள்ள குழாயில் இருந்துதான் திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.... கசிவு ஏற்பட்டதும், 100 மேற்பட்ட பணியாளர்கள் மூச்சு திணறியபடி, அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்தில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அங்கிருந்த அதிகாரிகள், அவசர அவசரமாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வாயு கசிவை சரிசெய்யும் பணியில் இறங்கினார்கள். அதில் இரண்டு வீரர்களுக்கு, மூச்சு திணறல் ஏற்படவே மேலும் பதற்றம் அதிகரித்தது. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன்பாகவே 4 கிலோமீட்டர் தூரத்துக்கு அம்மோனியா வாயு கசிவு உணரப்பட்டது. அப்பகுதி மக்களோ அம்மோனியா நெடியால் அச்சத்தில் உறைந்து போனார்கள். அமோனியா வாயு என்பது பெரும்பாலும் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படும் ஒரு வேதியவாயு. அடர் நாற்றத்தை கொண்ட இந்த வாயு, காற்றை விட எடை குறைவானது. அதிவேகமாக காற்றில் பரவும் தன்மை கொண்டது. இந்த வாயுவால் கண் எரிச்சல்,தோல் அரிப்பு, நுரையீரலில் அலர்ஜி ஏற்படும், சில நேரத்தில் மரணத்தையும் கூட ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.எனவே ஆவின் நிறுவனங்களில் உள்ள அமோனியா குளிர்விப்பான் களின், பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்