அமித் ஷாவின் மனசாட்சி 'அண்ணாமலை' - "சீட்".. ஈபிஎஸ்-க்கு புது சிக்கல் | BJP | EPS

x

மத்திய பா.ஜ.க. அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் வேலூர் கந்தனேரியில் இன்று நடைபெற்றது. இதற்காக சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் விழா மேடையில் உரையாற்றிய அமித்ஷா, கடந்த 9 ஆண்டு காலமாக சிறப்பாக ஆட்சியை நடத்த ஒத்துழைப்பு அளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். எங்கு சென்றாலும் தமிழ் மொழியை பற்றி பேச பிரதமர் மோடி மறந்ததில்லை என தெரிவித்தார். தமிழ்நாட்டிற்கு 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் மோடி கொடுத்திருப்பதாகவும், 58,000 கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்தார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் இருந்து 25 தொகுதிகளை பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியை அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்த அமித்ஷா, ஊழல் செய்தவர்களை தூக்கியெறிய வேண்டுமென குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க 300-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று, மோடி தலைமையிலான அரசு 3வது முறையாக ஆட்சியமைக்கும் என அமித்ஷா தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்