மிஸ்டு கால் கொடுத்த அமித்ஷா.. மேடையில் மோடி போனுக்கு வந்த OTP
நாட்டில் உள்ள எல்லைப்புற கிராமங்களை பாஜகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழாவில், பாஜகவின் தேசிய அளவிலான உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.இதில் அமைச்சர்கள் ஜே.பி.நட்டா,அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பாஜகவில் உறுப்பினராக சேர விரும்புபவர்கள் உறுப்பினராக இணைவதற்கு வசதியாக 88000-02024 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.இந்த எண்ணில் மிஸ்டுகால் வழங்கிய பிரதமர் மோடி தன்னுடைய அலைபேசி எண்ணுக்கு வந்த OTP எண்ணை உள்ளீடு செய்து பாஜகவில் தன்னை உறுப்பினராக புதுப்பித்ததோடு உறுப்பினர் சேர்க்கையும் முறைப்படி தொடங்கி வைத்தார்.அவரைத் தொடர்ந்து நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் இந்த எண்ணில் மிஸ்டு கால் வழங்கி தங்களை உறுப்பினராக புதுப்பித்தனர்.அதன் பிறகு பிரதமர் மோடி உள்ளிட்டவருக்கு பாஜகவின் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையை பாஜக தலைவர் நட்டா வழங்கினார்.