குமாரசாமிக்கு வாக்களிப்போருக்கு அமித்ஷா புதிய யோசனை..!

x

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டையில் பிரசாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் பெருகிவிடும், குடும்ப அரசியல் வேரூன்றும் என விமர்சனம் செய்தார். தேர்தல் என்பது வெறுமனே எம்.எல்.ஏ.க்களை தேர்வு செய்வதற்கான அல்ல எனக் கூறிய அமித்ஷா, தேர்தல் மாநில எதிர்காலத்தை பிரதமர் மோடியிடம் வழங்குவது என விளக்கம் அளித்தார். இப்போதைய தேர்தல் கர்நாடகாவில் வளர்ச்சியையும், அரசியல் நிலைத்தன்மையையும் உருவாக்கும் தேர்தல் எனக் கூறிய அமித்ஷா, குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வாக்களிப்போருக்கு புது யோசனையை வழங்கினார். குமாரசாமி கட்சிக்கு வாக்களிப்பது காங்கிரசுக்கு வாக்களிப்பது சமமாகும் என கூறிய அமித்ஷா, அந்த வாக்குகளை பாஜகவுக்கு செலுத்துமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்