அமெரிக்காவின் நம்பர் 1 சுற்றுலா நகரம்... அழகும் பிரமாண்டமும் கொண்ட சிகாகோ...
ஊர் விட்டு டூர் வந்து பகுதில இன்னைக்கு நாம சுத்தி பார்க்க போற இடம் சிகாகோ...
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகானத்தில் இருக்கும் மிகப்பெரிய நகரம் தான் இந்த சிக்காக்காகே... மிகப்பெரிய பெரிய நகரம் மட்டும் கிடையாதுங்க... ரொம்ப அழகான நகரம்னு கூட சொல்லலாம்!
உலகத்துலயே நம்பர்-1 சுற்றுலா நகரம் எது கேட்டதும்... நான் தான் நம்பர் ஒன்னு... பல நகரங்கள் போட்டி போட்டு வரலாம்... ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு... அந்த போட்டில் ஜெயிச்சது என்னவோ சிக்காகோ நகரம்தான்....
பட் அந்த ஒரு வருசத்துல மட்டும்... கிட்ட தட்ட 5 கோடியே 80 லட்சம் சுற்றுலாவாசிகள் இந்த நகரத்தைச் சுற்றிப் பார்க்க வந்துருக்காங்களாம்... என்ன காரணம்னு கேட்டா ? உலகின் மிக அழகான நகரங்களோட பட்டியல்ல இரண்டாவது இடத்தை பிடிச்சுருக்கு நம்ம சிகாகோ நகரம்...
புயல் காற்று வீசும் சூறாவளி நகரம்...
ஊர் சுற்ற கிளம்பலாம் வாங்க...
நம்ம சென்னைக்கு... மெட்ராஸ்னு இன்னொரு பேரு இருக்குற மாதிரி... சிக்காகோ நகரத்துக்கு இருக்குற இன்னோரு பேரு தான் The Windy City...அதாவது காற்றடிக்கும் நகரம்னு அர்த்தமாம்...
ஏரியும் , ஆறுகள் சூழ்ந்திருக்க நடுவுல இந்த சிட்டி இருக்குறதுனால.... இங்க காத்தடிக்கும் வேகம் கொஞ்சம் அதிகமா தான் இருக்குமாம்... அதாவது மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்துல காற்று அடிச்சுகிட்டே இருக்கும்னா பாருங்களேன்...
சிகாகோவை பத்தி பேசுனாலே... தவிர்க்க முடியாத முக்கியமான இடம்னா அது சிகாகோ ரிவர் தான்....
சென்னையோட நரம்புகளா நம்ம கூவம் ஆறு இருக்குற மாதிரி... சிக்காக்கோ ரிவர் இந்த நகரத்தோட நரம்புகள்னே சொல்லலாம்... முக்கியமா இந்த ஆறு... இந்த நகரத்தோட முக்கிய அடையாளங்கள்ல ஒன்னா இருக்குறதுனால... மக்கள் கூட்டம் படையெடுக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்டாவும் இருக்கு... சரி வாங்க நம்மளும் படகுல ஏறி இந்த ஊரோட அழக ரசிக்க ஆரம்பிக்கலாம்...
படகுல டிராவல் பண்ணிட்டு இருக்கும்ப்போது... இந்த ஆறை பத்துன இன்னோரு விசயசத்தை நம்ம கிட்ட சேர் பண்ணாங்க இந்த ஊர் மக்கள்... அதாவது ஆறுனா முன்னோக்கிதானே ஓடும்... ஆன இந்த ஆறு மட்டும் பின்னோக்கி ஓடுமாம்...
பிரம்மாண்ட கட்டிடம், கண்ணாடி மாதிரி பள பளக்குற ரோடுனு... சிக்காகோ நகரத்துக்கு மேலும் அழகு சேக்குறதுனால தான்... ஹாலிவுட் வட்டாரத்தின் கோடம்பாக்கமா இருக்கு இந்த சிக்காகோ... பேட்மேன் படத்துல சூப்பர் ஹீரோ பேட்மேன் கோத்தம் சிட்டிய காப்பாத்த கிளம்புவார்ல... அந்த கோத்தம் சிட்டி கிட்டத்தட்ட சிக்காகோ நகரம்தான்னு சொல்லனும்... ஏனா ரீசன்டா வெளிவந்த பேட்மேன் படங்கள் சூட் பண்ணது எல்லாமே சிக்காகோ சிட்டில தான்...
சிகாகோவுக்கு இருக்குற இன்னொரு சிறப்பு பெயர் தான்.... அருங்காட்சியகங்களின் நகரம்...
தி ஆர்ட் இன்ஸ்டியூட் ஆப் சிகாகோ, மியூசியம் கேம்பஸ், மியூசியம் ஆஃப் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரினு... இப்படி பல வகையான மியூசியங்களோட பேர் பட்டியல சொல்லிக்கிட்டே போகலாம்... அதுலையும் முக்கியமா இங்க இருக்க ஃபீல்ட் மியூசியத்தில ஜுராசிக் பார்க் காலத்துல வாழ்ந்த பிரம்மாண்ட டைனோசரின் உண்மையான எலும்புக்கூட பாக்குறதுக்காகவே கூட்டம் அள்ளுது...
நம்மலாம் ஒட்டு மொத்த ஊரையே தரிசனம் பண்ண... உயரமான மலை, பில்டிங்,லைட் ஹவுஸ் மேலலாம் ஏறி நிக்குற மாதிரி... சிகாகோல இருக்க வில்லிஸ் டவர் உச்சிக்கு போனா போதும் ஒட்டு மொத்த சிட்டியையும் ஒரே பார்வைல தரிசனம் பண்ணிடலாம்...
பில்டிங் மேல நின்னு டோட்டல் சிட்டிய ஒரே நேரத்துல பாத்த நாம... இப்போ கீழ கின்னுகிட்டே டோட்டல் சிட்டிய பாக்க போறோம்... அது எப்டினு யோசிக்குறீங்களா... அந்த அதிசியத்தை பண்ண கூடிய இடம் தான் மில்லினியம் பார்க்...
சிகாகோ நகரத்தோட இன்னொரு அடையாளங்கள்ல ஒன்னா இருக்கு இந்த மில்லினியம் பார்க்... 110 டன் எடை கொண்ட இந்த சிற்பம் பாக்க பாதரச துளி போல இருக்குறதுனால... ஒட்டு மொத்த சிகாகோ நகரத்தையும் பிரதிபலிக்குறதை தாண்டி... இந்த சிற்பத்துக்கு பக்கத்துல போய் நின்னாநம் முகத்தையும் அது பிரதிபலிக்கும்.
நம்மலாம் நீர்வீழ்ச்சிய பாக்கனும்னா... குற்றாலம், கொடைக்கானல்னு போய் பாத்து ரசிப்போம்... ஆனா சிக்காகோ நகரத்துல நீர்வீழ்சிகள் இல்லாததுனால... செயற்கயாவே பிரம்மாண்ட நீர்வீழ்ச்சி தளத்தை உருவாக்கிருக்காங்க... இந்த ஊர் அரசாங்கம்...
பக்கிங்காம் பவுண்டைன்னு சொல்லப்படுற இந்த அழகான செயற்கை நீர்வீழ்ச்சி... ஒரு காலத்துல உலகின் மிகப்பெரிய ஃபவுன்டெயினாக பேசப்பட்ட வரலாறு இதற்கு உண்டு... இவ்வளவு பெரிய ஃபவுண்டைன் சிகாகோ நகர்ல இருக்குதுங்குற ஆச்சர்யத்தை விட... இதை 1927 ஆம் ஆண்டுலேயே கட்டியிருக்காங்குறது தான் ஆச்சர்யமே... மொத்தம் 200 தண்ணீர் குழாய்கள் கொண்ட இந்த ஃபவுண்டைன்... ஒரு நாளைக்கு சுமார் 56 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மழை சாரல் போல பீச்சி அடிக்குது.
சிக்காகோவ்ல மிகப்பெரிய அக்வாரியமா இருக்கு... Shed அக்வாரியம்...
இந்த அக்வாரியம்ல உலகத்துல இருக்க அத்தனை கடல் வாழ் உயிரினங்கள் இங்க தான் குடித்தனம் பண்ணுதுனே சொல்லலாம்....
இது கூடவே ஸ்டிங் ரே டச் டேங்க் (Stingray Touch Tank) கிட்ட போனோம்னா... சில பாசாக்கார மீன்களை தொட்டுப் பார்க்கும் உணர்வு நம்ம குட்டீஸ்களுக்கு கிடைக்கும்.
அக்வாரியம் மட்டுமா? சிக்காகோவில் சிறப்புமிக்க பிளானட்டேரியமும் உண்டு. அட்லர் பிளானட்டேரியம் (Adler Planetarium) என அழைக்கப்படும் இதை 1930 ஆம் ஆண்டு கட்டிருக்காங்க.... கடந்த ஒரு நூற்றாண்டில் ஏற்பட்ட வானவியல் முன்னேற்றங்கள் எல்லாமே இங்கே காட்சிக்கு வச்சிருக்காங்க இன்னும் சொல்லப்போனா மேற்கத்திய நாடுகள்லயே முதன்முதலாக உருவாக்கப்பட்ட கோளரங்கம் இதுதானாம்...
சரி... ரொம்ப நேரம் ஊரா சுத்திட்டு இருக்கோம்... அதுனால கொஞ்சம் இந்த ஊர்ல இருக்க திருவிழாக்களையும் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம் வாங்க...
நடுங்க வைக்கும் சாகசம்...
இந்த சிட்டில ஒவ்வொரு வருசமும் மக்கள் கூட்டம் படையெடுக்குற ஒரு திருவிழானா அது Air and Water Show திருவிழா தான்... இந்த திருவிழா அன்னைக்கு பீச்ல ஜெட் விமாணங்கள், போர் விமானங்கள பறக்க விட்டு... அந்தரத்துல வித விதமா சாகசங்கள்லாம் செஞ்சு... வான வேடிக்கை காட்டிடுவாங்க...
மிசியூக்ல நமக்கு தெரிஞ்சதுலாம் ஏ ஆர் ரகுமான் மியூசிக், அனிருத் மியூசிக் அவ்ளோ தான்... ஆனா இங்க நடக்குற World Music Festival க்கு போனோம்னா.... உள்ளூர்ல ஆரம்பிச்சு
யப்ப... யப்ப... யப்பா... ஊரு, திருவிழானு சுத்தி பாத்து ரொம்ப டயார்ட் ஆகிட்டோம்... அதுனால் இந்த ஊர் சாப்பாட ஒரு புடி புடிக்கலாம் வாங்க்...
அமெரிக்கால பர்கர் புகழ் பெற்ற உணவுனாலும்... சிக்காகோல மட்டும் கிடைக்குற Kuma Burger கொஞ்சம் ஸ்பெஷல் தான்.
நீளமான ரொட்டிக்குள்ள கரித்துண்டுகளை வைத்து செய்யப்படும் ஹாட் டாக்... குட்டி பசிய அடக்க நல்ல சாய்ஸ்...
பீட்சாவ கண்டுபிடிச்சது வேனா இத்தாலிகாரங்களா இருக்கலாம்... ஆனா, குழியான தோசைக்கல்ல பீட்சாவை சுட்டு எடுக்கும் Deep Dish பீட்சாவ கண்டுபிடிச்சது நம்ம சிக்காகோகாரங்க தான்...
நான்வெஜ் பிரியர்களின் நாக்கில் நீர் சொட்ட வைக்கும் இந்த obarito.
பலூனை ஊதி விளையாட தான் செய்வோம்... ஆனா இங்க பலூனை பெருசா ஊதி சாப்பிடுறாங்க... என்னாங்க பலூனை திங்குறீங்கனு கேட்டா... இது பலூன் கிடையாது இதுவும் சாப்பிட்ற ஐட்டம் தான்னு சொல்லி நம்மள ஆச்சர்ய படுத்திட்டாங்க....
சமையல் முதற்கொண்டு சகல விஷயங்களிலும் அள்ள அள்ள ஆச்சரியம், திகட்ட திகட்ட சுவாரஸ்யம் குடுக்குதுனா அதுக்கு பேரு தான் சிகாகோ நகரம்.