அமெரிக்க தடகள வீரர் ஜிம் ஹைன்ஸ் மறைவு..10வினாடிக்குள் 100மீ தூரத்தை ஓடிக் கடந்த உலகின் முதல் மனிதர்
10 வினாடிகளுக்குள் 100 மீட்டர் தூரத்தை ஓடிக் கடந்த உலகின் முதல் மனிதரான ஜிம் ஹைன்ஸ் காலமானார். அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியனான ஜிம் ஹைன்ஸ் 1968ல் மெக்சிகோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தூரத்தை 9.95 விநாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார். அவரது சாதனை 15 ஆண்டுகளுக்குப் பிறகே முறியடிக்கப்பட்டது. அதே ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் ஹைன்ஸ் தங்கம் வென்றார். இந்நிலையில், ஜிம் ஹைன்ஸ் தனது 76வது வயதில் வயது மூப்பால் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story