"கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸ் கேட்டும் தரவில்லை"ஆட்டோவில் செல்லும் வழியிலே பிரசவம் |

x

கர்ப்பிணி பெண்ணை ஆட்டோவில் அனுப்பியதால் குழந்தை இறந்து பிறந்ததாக கூறி, உறவினர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி பேச்சியம்மாள், அங்குள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில், தொடர் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு இருக்கிறார்.

நிறைமாத கர்ப்பிணியான பேச்சியம்மாளுக்கு பிரசவத்திற்கு நான்கு தினங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு முன்பதாகவே பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வழக்கம் போல கல்லூர் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இன்று பிரசவமாகும் என்று கூறிவிட்டு காத்திருக்க சொல்லி இருக்கின்றனர். ஆனால் மீண்டும் சில மணி நேரம் கழித்து பரிசோதனைக்கு பின்பு உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறி இருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் கேட்டும் தராததால் ஆட்டோவில் சென்ற நிலையில் செல்லும், வழியில் பிரசவம் ஏற்பட்டு குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்