ஊசலாடிய உயிர்.. மாணவனை அப்படியே சாலையில் போட்டு விட்டு சென்ற ஆம்புலன்ஸ்.. காரைக்காலில் அதிர்ச்சி
காரைக்காலை சேர்ந்த கமல்நாதன் மற்றும் சுடரொளி என்ற 2 கல்லூரி மாணவர்கள் டூவிலரில் சென்றபோது, லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த இருவரும் உயிருக்கு போராடிய நிலையில், ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் கமல்நாதன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தாமதமாக வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கமல்நாதனின் உடலை சாலையிலேயே கிடத்தி விட்டு, சுடரொளியை மட்டும் ஏற்றிச் சென்றுள்ளார். இதையடுத்து, மாணவனின் சடலத்தை கைகளில் ஏந்தியவாறு, அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் நடைபயணமாக சென்றனர். மேலும், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story