அமேசான் நிறுவனத்தின் ஓட்டுனர் இல்லா கார்... Zoox உருவாக்கிய மின்சார ரோபோ டாக்ஸி கார்... ஸ்டீரிங் வீல், பிரேக் பெடல்கள் கிடையாது
- ரோபோ டேக்ஸி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தானியங்கி காரில், ஸ்டீரிங் வீல், பிரேக் பெடல், ஆக்சிலிரேட்டர் பெடல், கிளட்ச் பெடல் ஆகியவை கிடையாது.
- ஓட்டுனரே இல்லாமல், சென்சார்கள், அதிநவீன கேமிராக்கள் உதவியுடன் ஒரு கம்ப்யூட்டர் இந்த மின்சார காரை வழி நடத்தி, துல்லியமாக இயக்குறது.
- அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸூக்ஸ் (Zoox) நிறுவனம் இதை உருவாக்கி, சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
- இதில்ஸூக்ஸ் (Zoox) நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள், இதில் பயணிகளாக ஏற்றிச் செல்லப்பட்டனர்.
- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபாஸ்டர் சிட்டியில் உள்ள ஸூக்ஸ் (Zoox) நிறுவன வளாகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
- மணிக்கு 75 மைல்கள் வேகம் செல்லும் திறன் கொண்ட இந்த ரோபோ டேக்ஸியில், இரண்டு அடுக்கு பேட்டரிகள் உள்ளன.
- ரீச்சார்ஜ் செய்யப்பட்ட பின்16 மணி நேரம் வரை இயங்கும் திறன் கொண்ட இந்த ரோபோ டேக்ஸி விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.
Next Story