உறவுகளை வலுப்படுத்தும் பெரிய கும்பிடு திருவிழா! - வியந்து பார்க்க வைத்த வினோத திருவிழா!
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள ஒவுல்ராயப் பெருமாள் கோயிலில், உறவுகளை வலுப்படுத்தும் பெரிய கும்பிடு திருவிழா நடைபெற்றது. சுள்ளார் குலத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், கோயிலில் இருந்து ஊர்வலமாகச் சென்று மைதானத்தில் பூமியில் முகம் பதித்து படுத்திருக்க, மூத்த பூசாரிகள் சிறப்பு பூஜை செய்யபட்ட புனித நீரை தெளித்தும், பிரம்பால் தொட்டும் ஆசிர்வாதம் வழங்கினர். மைதானத்தில் இருந்து கைகளைப் பிரிக்காமல் கோவிலை வந்ததடைந்தவர்களுக்கு பாலில் கைகளை நனைத்து பூசாரிகள் பிரித்துவிட்டனர்.
Next Story