"4 நாளா சாப்பிடல.. பிச்சை எடுக்கப் போறேன்.." - நடுரோட்டில் அழுது புலம்பும் சாமியார் பாஸ்கரானந்தா

x

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நீதிமன்ற ஆணையின்றி தனது ஆசிரமம் இடிக்கப்பட்டுள்ளதாக சாமியார் பாஸ்கரானந்தா வேதனையுடன் கூறியுள்ளார். பல்லடத்தை காரணம்பேட்டையில், செல்வகுமார் என்பவரிடம் நிலத்தை குத்தகைக்குப் பெற்று, பாஸ்கரானந்தா ஆசிரமம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே, செல்வகுமார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால், வேறு ஒருவருக்கு அந்த இடம் ஏலம் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரவோடு இரவாக பாஸ்கரானந்தாவின் ஆசிரமம் இடித்து தள்ளப்பட்டது. இதுகுறித்து அவர் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், விசாரணைக்கு வந்திருந்தார். அவர், இரண்டு பேருந்துகளில் பக்தர்களை அழைத்து வந்ததால் காவல் துறை உயரதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் கலங்கிப் போன பாஸ்கரானந்தா, தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிச்சை எடுக்கப்போவதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்