அதிமுக அலுவலக கலவர வழக்கில் அனைத்து ஆவணங்களும் மீட்பு - சிபிசிஐடி

x

அதிமுக அலுவலக கலவர வழக்கில் திருடப்பட்ட அனைத்து ஆவணங்களும் மீட்பு -சிபிசிஐடி

113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்

அதிமுக கழக அமைப்பு செயலாளர் சிவி சண்முகம் அதிமுக அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் பரிசு பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாக அழிக்கப்பட்ட புகார் அடிப்படையில் ஓபிஎஸ் உள்ளிட்ட 60 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது

இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிசிஐடி போலீசார் அதிமுக அலுவலகத்தில் இருந்து காணாமல் போன ஆவணங்கள் அனைத்தையும் மீட்டுள்ளனர்

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக பத்திரம், ஜானகி எழுதி கொடுத்த ஆவணம், அண்ணா டிரஸ்டின் ஆவணம், பாண்டிச்சேரி, திருச்சி மற்றும் மதுரை உள்ள கட்சியின் சொத்து பத்திரம் ஆகியவை உட்பட 113 செட் ஆவணங்கள் மீட்பு.

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இடமிருந்து அனைத்து ஆவணங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்

மீட்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்