“கடப்பாரை எல்லாம் சரிபட்டு வராது... JCP-ஐ வைத்து அப்படியே தூக்கிடலாம்“ போலீசை மிரளவிட்ட ATM கொள்ளை
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சுத்தி, கேஸ் கட்டர் எல்லாம் பழசு...
ஜே சி பி இயந்திரத்தால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி...
கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்....
கடப்பாறை, சுத்தி, கேஸ் கட்டர் ஆகியவற்றை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் கொள்ளை அடிக்கப்பட்டதாக செய்திகள் வந்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் கர்நாடகாவில் ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடிக்க முயன்றுள்ள சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஷிமோகா மாவட்டத்தின் வினோபா நகர் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் ஏடிஎம்மில் இந்த கொள்ளை முயற்சியானது நடைபெற்று உள்ளது. மர்ம நபர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை அடியோடு பெயர் முயற்சி செய்து கொண்டிருந்த போது, வழியாக வந்த ரோந்து போலீசாரை பார்த்து ஜேசிபி இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி உள்ளார். இதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தை கைப்பற்றியுள்ள போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளி யார் என தேடி வருகின்றனர்.