அலைமோதும் ஐயப்ப பக்தர்கள்... தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருப்பு

x

ஐயப்பனை தரிசிக்க, இன்று மட்டும் 90 ஆயிரத்து 620 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், பலரும் முன்பதிவு செய்யாமல் வருவதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதனால் சன்னிதானத்திலிருந்து மரக்கூட்டம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பம்பையிலேயே பக்தர்களை தடுத்து நிறுத்தும் போலீஸார் குழுவாக அனுப்பி வருகின்றனர். மேலும் தரிசனம் முடித்த பக்தர்கள் உடனடியாக மலை இறங்கவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்