முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா-அபிஷேக் ஜோடி
முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா-அபிஷேக் ஜோடி
ஜோடியாக சேர்ந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்டு விவாகரத்து புரளியை ஊதி அணைத்துள்ளனர் ஐஸ்வர்யா - அபிஷேக் ஜோடி... மும்பையில் நடந்த திருமண நிகழ்வொன்றில் அபிஷேக் பச்சனும், அவரது மனைவி ஐஸ்வர்யா ராயும் மேட்ச் ஆக உடையணிந்து உற்சாகமாக பங்கேற்றனர். மேலும் இருவரும் இணைந்து திருமண நிகழ்வில் செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர்.. இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அம்பானி இல்ல திருமணத்தில் அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா தனித்தனியாக வந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து, இருவரும் பிரிந்து விட்டதாக வதந்தி பரவி வந்த நிலையில், திருமண நிகழ்வில் இணைந்து கலந்து கொண்டு புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Next Story