ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை - திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு | Aishwarya Rajinikanth
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர் விஷ்னு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அரசு விடுதிக்கு மாணவிகள் செல்ல முடியாமல் பாதிக்கபப்ட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், அலுவலகத்தில் உள்ள இ - சேவை மையத்துக்கும் பொதுமக்கள் செல்ல இயலாத வகையில் சுற்றி கயிறு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை தொடர்ந்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்