தள்ளாடும் ஏர் இந்தியா ? டாடா குழுமம் எடுக்கும் அதிரடி முடிவு - இனி யாரும் பறக்கலாம் ஜாலியா..

x

500 புதிய ஜெட் விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை 2021 அக்டோபரில், மத்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கியது.

தற்போது ஏர் இந்தியா வசம் தற்போது 153 விமானங்கள் உள்ளன. ஏர் இந்தியாவை விஸ்தாராவுடன் இணைந்த பின் இது 218ஆக அதிகரிக்க உள்ளது.

இந்நிலையில், 8.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 500 புதிய ஜெட் விமானங்களை வாங்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. 400 குறுகிய அகலம் கொண்ட ஜெட் விமானங்களும், 100 அகலமான ஜெட் விமானங்களும் வாங்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பத்துக்கும் அதிமாகன ஏ 350, போயிங் 787, போயிங் 777 ரக பிரமாண்ட விமானங்களும் இந்த பட்டியலில் உள்ளன. தற்போது இந்திய சந்தையில் 10 சதவீதத்தையும், சர்வதேச சந்தையில் 12 சதவீதத்தையும் ஏர் இந்தியா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்