புல்லட்களை மட்டும் குறிவைத்து திருட்டு...20 பைக்கை பறிமுதல் செய்த போலீசார் - தஞ்சாவூரில் பரபரப்பு
தஞ்சாவூர் அருகே புல்லட் இருசக்கர வாகனங்களை மட்டும் குறிவைத்து திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். நகரம், வல்லம், ஒரத்தநாடு பகுதிகளில் புல்லட் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து உயர் ரக பைக் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் திருடிய பைக்கை குறைந்த விலைக்கு விற்க முயன்றபோது, அரவிந்த் என்ற இளைஞர் சிக்கிய நிலையில், அவரிடம் இருந்து 20 புல்லட் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், அவருக்கு உதவியாக இருந்த மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
Next Story