கர்நாடக தேர்தலில் களமிறங்கும் அதிமுக..? ஈபிஎஸ்-ன் அடுத்த அதிரடி மூவ்... பாஜகவின் நிலைப்பாடு என்ன..?
கர்நாடகாவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என கர்நாடக மாநில அதிமுக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் பத்தாம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடக மாநில அதிமுக சார்பில், 2023 கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்து கேட்பு கூட்டம் அம்மாநில பொதுச் செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் ஷிமோகா, சாம்ராஜ் நகர், கோலார் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெங்களூர் நகர அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலானவர்கள் அதிமுக இந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி. குமார், நிர்வாகிகள் தெரிவித்த கருத்தை கட்சி மேலிடத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும், கட்சி மேலிடம் என்ன தெரிவிக்கிறதோ அதன்படி அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.