ரூ.3 கோடி வாங்கி விட்டு ஏமாற்றியதாக புகார் - அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது

x
  • கரூர் மாவட்டத்தில் பண மோசடி புகாரில், அதிமுக பிரமுகர் அன்புநாதனை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
  • கரூர் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அன்புநாதனுக்கு, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை சேர்ந்த பிரகாஷ் என்பவர், கடந்த 2018- ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
  • அதைத் தொடர்ந்து கடந்த 2020-இல், தாம் நடத்தி வரும் நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி, பிரகாஷிடம் இருந்து மேலும் 2 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.
  • ஆனால், அந்த நிறுவனத்தில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளாததால், கடந்த 15 நாட்களுக்கு முன்பு அன்புநாதன் வீட்டுக்குச் செனறு அவரிடம் பிரகாஷ் பணம் கேட்டுள்ளார்.
  • அப்போது பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என்று கூறி, பிரகாஷை அன்புநாதன் மிரட்டியதாக கூறப்படுகிறது.
  • இதுதொடர்பாக, பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், அன்புநாதனை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்