காலையே வீட்டு வாசலில் நின்ற ED... தமிழக அரசியலை சூடாக்கிய ரெய்டு - 15 மணி நேரம் பரபரப்பில் தஞ்சை

x

காலையே வீட்டு வாசலில் நின்ற ED... தமிழக அரசியலை சூடாக்கிய ரெய்டு - 15 மணி நேரம் பரபரப்பில் தஞ்சை

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 15 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அவரது ஆதரவாளர்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம்.

அப்போது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்டு இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்திற்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க, 27.90 கோடி ரூபாயை வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி வைத்திலிங்கம், உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை அடிப்படையில், நேற்று காலை 7.30 மணிக்கு தஞ்சை மாவட்டம் தெலுங்கன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு சென்றனர்.

5 கார்களில், 15 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து வீட்டில் இருந்த வைத்திலிங்கம், அவரது மகன் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினரிடம் விசாரணை செய்தனர்.

சுமார் காலை 11:00 மணிக்கு, முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவரது ஆதரவாளர்களுடன், வைத்திலிங்கம் வீட்டிற்கு முன்பு வந்து கூச்சலிட்டனர். இதையடுத்து வீட்டிற்கு வெளியே வந்த வைத்திலிங்கம், கூடியிருந்த ஆதரவாளர்களை கலைந்து செல்லுமாறு கூறினார். ஆனாலும், யாரும் செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்