அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அதிமுக சார்பில் வெளிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், மின் கட்டணம், சொத்து வரி , குடிநீர், கழிவு நீர் இணைப்பு கட்டணங்கள் உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்டவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வரும் 27ம்தேதி காலை 10 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story