தாஜ்மஹாலுக்கு ஆக்ரா மாநகராட்சி நோட்டீஸ்.. வரலாற்றிலேயே இதுதான் முதன்முறை

x

தாஜ்மஹாலுக்கு வீட்டு வரி செலுத்தக் கோரி, ஆக்ரா மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது, தொல்லியல் துறை அதிகாரிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆக்ரா மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள நோட்டீசில், நடப்பு ஆண்டின் மார்ச் 31ம் தேதி வரையிலான வீட்டு வரி 88 ஆயிரத்து 784 ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும், அதற்கு அபராதத் தொகையாக 47 ஆயிரத்து 983 ரூபாய் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022 - 23 காலக்கட்டத்திற்கான வீட்டு வரி 11 ஆயிரத்து 98 ரூபாய் சேர்த்து, மொத்தமாக ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 826 ரூபாயை, 15 நாட்களுக்கு செலுத்தும்படி அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆக்ரா சுற்றுலா நல வாரிய செயலாளர் விஷால் சர்மா கூறுகையில், நினைவுச் சின்னத்திற்கு எதற்கு வீட்டு வரி செலுத்த வேண்டுன் என புரியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், தண்ணீர் வரியாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. வணிக ரீதியாக தண்ணீரை பயன்படுத்தாதபோது, அதற்கு ஏன் வரி செலுத்த வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்புவது இதுவே முதல்முறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்