அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு - பாதி செலவு ராணுவமே ஏற்கும் என அறிவிப்பு
- அக்னிவீர் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் மார்ச் 15 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறை குறித்து திருச்சி மண்டல இயக்குனர் கர்னல் தீபக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
- அதில், ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 15ஆம் தேதி வரை இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், நுழைவுத்தேர்வு திருச்சி மண்டலத்தில் நெல்லை மற்றும் திருச்சி நகரங்களில் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
- நுழைவுத் தேர்வு கட்டணம் 500 ரூபாயில் விண்ணப்பதாரர் 250 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும் என்றும், மீதி தொகையை இந்திய ராணுவம் எற்றுக்கொளும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- நுழைவு தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story