ராகுல் தகுதி நீக்கத்திற்கு பிறகு.. முதல் அமர்வு .. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் - என்னென்ன புதிய மசோதாக்களுக்கு வாய்ப்பு?
நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், இம்முறை தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள் என்னென்ன? என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் 17 நாட்களில் மொத்தம் 31 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, வன பாதுகாப்பு திருத்த மசோதா....
எளிதில் வணிகம் செய்ய உதவும் தி ஜன் விஸ்வாஸ் திருத்த மசோதா 2022....
பல்லுயிர் பாதுகாப்பை மேம்படுத்த உயிரியல் பன்முகத்தன்மை திருத்த மசோதா 2021....
டெல்லி சேவைகள் மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் தனிநபா் தரவு பாதுகாப்பு மசோதா 2022...
தேவையற்ற சட்டங்களை நீக்க வழி வகுக்கும் ரத்து மற்றும் திருத்த மசோதா 2022,
பல மாநில கூட்டுறவு சொசைட்டி திருத்த மசோதா....
மத்தியஸ்தர்களின் பங்கு மற்றும் செயல்பாடுகளை வரையறுக்கும் மத்தியஸ்த மசோதா 2021...
தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை மசோதா 2023
சத்தீஸ்கரில் பழங்குடியின அரசியல் சாசன திருத்த மசோதா 2023
ஜம்மு காஷ்மீரில் பட்டியலின மற்றும் பழங்குடியின அரசியல் சாசன திருத்த மசோதா 2023
ஹிமாச்சலில் பழங்குடியின அரசியல் சாசன திருத்த மசோதா 2023
இதை தவிர்த்து... தபால் சேவைகள் மசோதா...
பழங்கால நினைவுச் சின்னங்கள் திருத்த மசோதா...
சர்வதேச நிதியம் மற்றும் வங்கி மசோதா...
தற்காலிக வரி வசூல் மசோதா... தேசிய கூட்டுறவு பல்கலைக்கழக மசோதா..
தேசிய பல் ஆணைய மசோதா... தேசிய செவிலியர் ஆணைய மசோதா... மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் மசோதா... பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா... திரைப்படம் சட்ட திருத்த மசோதா... பத்திரிகை பதிவு மசோதா... வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, 2023....சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் தொடர்பான மசோதா... ரயில்வே திருத்த மசோதா, 2023... அரசியலமைப்பு பட்டியலிடப்பட்ட சாதிகள் ஆணைய திருத்த மசோதா 2023... போன்ற மசோதாக்கள்.. தாக்கல் செய்யப்பட உள்ளன.
மொத்தம் 31 மசோதாக்கள் இரு அவையிலும் புதிதாத அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைவேற்றப்பட உள்ளன.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் அமர்வு என்பதால்.... இந்த கூட்டத்தொடரின் போது மணிப்பூர் விவகாரம், பொது சிவில் சட்டம் மற்றும் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.