இலாகா மாற்றியதும் அடுத்தடுத்த அதிரடியில் இறங்கும் அமைச்சர்

x

சென்னை அம்பத்தூர் அருகே பட்டரவாக்கத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுதவதாக எழுந்த புகாரை அடுத்து, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பால் தட்டுப்பாடு, பணியாளர்கள் பற்றாக்குறை போக்குவதற்காக 12 உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார். ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளம் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்ற அமைச்சர் மனோ தங்கராஜ், இனி காலதாமதம் ஏற்படாது, தங்கு தடையின்றி கிடைக்கும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்