"கணக்கை கூட்டி கழிச்சி, பார்த்தா சரியில்லையே..?" - தலைவருக்கு எதிராக துணைத் தலைவர் தர்ணா
அரச்சலூர் பேரூராட்சி தலைவரை எதிர்த்து, துணைத் தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பேரூராட்சியில் திமுக சார்பில் தலைவராக தேர்வான விஜயகுமாருக்கும், மதிமுக சார்பில் துணைத் தலைவராக தேர்வான துளசிமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், பேரூராட்சியின் நிர்வாக கணக்குகளை தன்னிடம் காட்டுவதில்லை எனக் கூறி, துளசிமணி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து வந்த போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வைத்தனர்...
Next Story