50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிலவுக்கு செல்லும் மனிதன்! - வெற்றி கண்ட நாசாவின் சோதனை
ஆர்டெமிஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நிலவுக்கு மனிதனை அனுப்பும் இந்த முயற்சியில், 3 மனித மாதிரிகளுடன் சோதனை செய்ய திட்டமிடப்பட்டது.
நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டமான ஆர்டெமிஸ் 1, இதற்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் சூறாவளி பாதிப்பால் தாமதமானது.
இந்நிலையில், இன்று அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவரலிலில் அமைந்திருக்கும் ராக்கெட் ஏவுகணை தளத்தில் இருந்து ஆர்டெமிஸ் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், எரிபொருள் கசிவு காரணமாக 45 நிமிடங்கள் தாமதத்திற்குப் பிறகு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
Next Story