கை அழுகிய விவகாரம் - குழந்தைக்கு அறுவை சிகிச்சை நிறைவு
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஓராண்டுகளாக தலையில் ரத்த கசிவு காரணமாக அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்ட நிலையில், கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட குறைபாட்டால் கை அழுகி தற்போது குழந்தையின் கையை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில் எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டுள்ள நிலையில், கையை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை இன்று நடைபெறுகிறது. இது குறித்து பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆய்வு செய்ய 3 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.
Next Story